சில மாதங்களுக்கு முன்பு எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது மனித வாழ்வில் நிகழும் எதிர்பாராத சில காரியங்களையும் அதனால் மனிதனுக்கு ஏற்படுகிற துயரமான சில தருணங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டது . சில வேளைகளில் ஏன் மனிதன் கலங்கி போகிறான் என்று ஒரு கேள்வி கேட்டால் , சிலர் சொல்லுகிறார்கள் , " எதிர்பாராத இழப்பினால் கலங்கி போய் விட்டோம் " என்றும் , சிலர் சொல்லுகிறார்கள் , " எனக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லை என்பதை நினைக்கும் போது என்னால் எப்படி கலங்காமல் இருக்க முடியும் ?" என்று .
பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 42 : 5 மற்றும் 12 வசனங்களை வாசிக்கும் போது , வேதம் சொல்லுகிறது , " என ஆத்துமாவே , நீ ஏன் கலங்குகிறாய் ? ஏன் எனக்குள் தியங்குகிறாய் ? தேவனை நோக்கி காத்திரு "
எவ்வளவு அற்புதமான வாரத்தைகள் கவனித்து பாருங்கள் . உங்களை நேசிக்கும் , உங்களுக்காக பரிதபிக்கும் , உங்களுக்காகவே இந்த உலகத்தில் வந்த ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது , நீங்கள் கலங்கவேண்டிய அவசியம் என்ன ?
எபிரெயர் 2 : 18 சொல்லுகிறது , " அவர்தாமே சோதிக்கப்ப்பட்டு பாடுபட்டதினாலே , அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார் " ஆம் .. பிரியமானவர்களே .., உங்கள் சோதனையில் உங்களுக்கு உதவி செய்வதற்காக சிலுவை பாடுகளை ஏற்றுகொண்ட ஒரு அன்பின் தெய்வம் உங்களுக்கு இருக்கிறார் .
I பேதுரு 5 : 7 சொல்லுகிறது , " அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் " உங்களை கனிவுடன் விசாரித்து , உங்கள் கண்ணீருக்கு பதில் கொடுக்கும் ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு இருக்கும் போது நீங்கள் கலங்கவேண்டிய காரணம் என்ன ..?
பிரியமானவர்களே , கவலைப்படாதிருங்கள் ... நீங்கள் சில காரியங்களை இழந்து போய் இருக்கலாம் , சில காரியங்கள் உங்களுக்கு எதிராய் இருக்கலாம் . சில மனிதர்கள் உங்களுக்கு விரோதமாக பேசி கொண்டே இருக்கலாம் . கடுமையான போராட்டங்கள் உங்கள் வாழ்வின் நிம்மதியை அழித்து உங்களை கலங்க செய்யலாம் . கல்வாரி சிலுவை பரியந்தம் உங்களுக்காக பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி உங்களுக்காக ஜீவனை தந்த அன்பின் தேவன் இயேசு உங்களுக்காக இருக்கிறார் . அவரை நோக்கி பாருங்கள் . உங்கள் கலக்கத்திற்கு பதிலாக உங்களை களிப்பினால் நிரப்புவார் .
ஒரு சிறிய ஜெபத்தை நாம் செய்வோமா ...?
அன்பின் பரலோக தகப்பனே , நீர் எங்களுக்காக இந்த உலகில் வந்து எங்களுக்காக மரித்து , மறுபடியும் உயிர்த்து பரலோகத்தில் எங்களுக்காக பரிந்து பேசுகிறீர் என்பதை நாங்கள் விசுவாசிக்க்றோம் . இப்பொழுதும் எங்களின் இந்த கலக்கமான சூழ்நிலையில் எங்கள் உள்ளத்தில் நீர் கடந்து வரும் படி உம்மை நாங்கள் அழைக்கிறோம் . இயேசு கிறிஸ்துவே , உலகம் தரமுடியாத உமது சமாதானத்தை நீர் எங்களுக்கு தாரும் . உமது ரத்தத்தினால் எங்களை கழுவும் . நீர் உமது சந்தோசத்தை எங்களுக்கு தருவதினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே .... ஆமென் .

பிரியமானவர்களே ... கலங்காதிருங்கள் ... கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் . ஆமென் .