Greetings to all of you in the precious name of our Lord and our Saviour Jesus Christ. Dear Brothers & Sisters, in Holy Bible Psalms 103 : 1 & 2 says “ My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name. My Soul praise the Lord, and do not forget all His benefits.” (Holman Christian Standard bible) Amen.. I love these words. Its great to meditate the goodness of our God in our life. Some times, we pray and He answers. But you know one special thing? Without our prayer, He does many good things to our soul. Let us see the things. Vs 3 says “ He forgives all your sins”. Of course, we believe God has cleansed our sins. But god shown me a special passage from the Holy bible in this regard. Let us go to II Samuel 5: 1 to 8. David captured Zion and he despised the lame and the blind. It is said , “ the lame and the blind will never enter the house”. You know the secret behind this. Jerusalem , the place of God was forbidden to the lame & blind. Who is Blind..? we… Yes we were blind by satan ( II Cor 4 : 4). Who is lame ..? we .. we had a wonderful Christian name .., but we were unable to walk to God and walk for God.. But in new testament , thank god .. a wonderful incident had been narrated by our Lord Jesus Christ. Yes … Come on let us go to … Luke 14 : 15 – 24. Just read the passage. When the called people hesitated to join the kingdom of God, Vs 21 says “ bring here the blind and the lame…” amen.. Dear Brothers & Sisters , John 1 : 11 says “ He came to His own and His own people did not receive Him..”. then God decided to call not by our faith but by His grace and made a permanent place in his House. Amen.. Halleluiah …! See John 1 : 12 , 13 says ,” …. You are children of God.. and you are born of God..” Amen… Is it great to meditate to these words, “ He has forgiven my sin and made me as HIS SON” “My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name. My Soul praise the Lord, and do not forget all His benefits” Amen . Message continues in the coming days. May god bless you. | ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பிரியமான சகோதர சகோதரிகளே , சங்கீதம் 103 : 1 & 2 சொல்லுகிறது, " என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" ஆமென். இந்த வார்த்தைகளை மிகவும் நேசிக்கிறேன். கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்ப்பது மிகவும் அற்புதமான விஷயம். சில வேளைகளில் நாம் ஜெபிக்கிறோம். அவர் பதில் கொடுக்கிறார். ஆனால் உங்களுக்கு ஒரு விசேஷம் தெரியுமா..? ஜெபிக்காமலே அவர் நம் ஆத்துமாவிற்கு அநேகம் நன்மைகளை செய்கிறார். அவைகளை நாம் தியானிப்போம். வசனம் 3 சொல்லுகிறது , " அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து ..." நாம் விசுவாசிக்கிறோம் கர்த்தர் நம் பாவங்களை மன்னித்தார் என்று. இது விஷயமாக கர்த்தர் ஒரு விசேஷித்த வேத பகுதியை எனக்கு காண்பித்தார். II சாமு 5 : 1 - 8 வாசித்து பாருங்கள். தாவீது சீயோனை பிடித்தான் அவனது ஆத்துமா குருடரையும் சப்பாணிகளையும் வெறுத்தது. அதனால் அவர்கள் சியோன் கோட்டைக்குள் பிரவேசிக்கும் தகுதி இழந்தார்கள். இதற்க்கு பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா..? எருசலேம் ., மகாராஜாவின் நகரம் குருடருக்கும் சப்பானிகளுக்கும் விலக்கப்பட்டிருந்தது. யார் குருடன் ? நாம்... ஆம் ..II கொரிந்தியர் 4 : 4 ன் படி பிசாசு நம்மை குருடாக்கி வைத்திருந்தான். யார் சப்பாணி ? நாம் .. ஆம்.. நல்ல கிறிஸ்தவ பெயர்கள் நமக்கு இருந்தும் கர்த்தரை நோக்கியும் கர்த்தருக்காகவும் நடக்க முடியாத சப்பாணிகள் ஆனால் புதிய ஏற்பாட்டில் ஒரு அருமையான சம்பவத்தை நம் அருள்நாதர் விளக்கினபடியால் அவருக்கு நன்றி. லூக்கா 14 : 15 - 24 வரை வாசித்து பாருங்கள். அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு வர தயங்கினபோது வசனம் 21 சொல்லுகிறது குருடரையும் சப்பாணிகளையும் உள்ளே கொண்டு வாருங்கள் என்று. ஆமென். அல்லேலுயா. யோவான் 1 : 11 சொல்லுகிறது , " அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார். சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை. " அதனால் கர்த்தர் நம்முடைய விசுவாசத்தின் படி அல்ல அவரது கிருபையினால் நம்மை அழைக்க சித்தம் கொண்டு நமக்கென ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினார். ஆமென் ... அல்லேலுயா யோவான் 1 : 12 , 13 சொல்லுகிறது " நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் , தேவனால் பிறந்தவர்கள்" கர்த்தர் நம்மை மன்னித்து அவரது பிள்ளைகளாய் மாற்றி உள்ளார் என்பதை தியானிக்க எதனை இனிமை. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" வருகிற நாட்களில் இந்த செய்தி தொடரும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..! |
வியாழன், அக்டோபர் 13, 2011
MY SOUL PRAISE THE LORD - என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக