ஆசாரியன் எப்படிபட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை கடந்த
இடுகைகளில் நாம் பார்த்தோம். இந்த பதிவில் ஆசாரியனின் ஜீவிதம் எப்படி இருக்க
வேண்டும் என்பதை நாம் பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக...!
1. தலைப்பாகை ஆசாரியனை விட்டு நீங்ககூடாது :- லேவி 1௦ :
6
ஆசாரியனின்
வஸ்திரங்களில் ஓன்று தலைப்பாகை. தலைப்பாகை வைத்திருக்கும் ஆசாரியன் மகிமையை அல்லது
கனத்தை கிரீடமாக வைத்து இருக்கிறான் என்று அர்த்தம், அந்த தலைப்பாகையை எடுத்தால் ,
கனவீனம் உண்டாகிவிடும். எனவே , ஆசாரியன் தனது கனத்தை காத்து கொள்ளவேண்டியது
அவசியம். கனம் என்றவுடன் படிப்போ அல்லது
பட்டங்களோ என்று நாம் நினைக்ககூடாது. இரட்சிப்பு தான் அந்த தலைசீரா என்று புதிய
ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். எபே 6: 17 , 1 தெச 5 : 8. ஆசாரியன் தான் பெற்று கொண்ட இரட்சிப்பை
காத்து கொள்ளவேண்டும்...
2. வஸ்திரங்கள் கிழிக்கப்பட கூடாது :- லேவி 1௦ : 6
பழைய
ஏற்பாட்டு காலங்களை நாம் பார்க்கும் போது , துக்கம் ஏற்ப்படுகிற வேளைகளில் தங்கள்
வஸ்திரங்களை கிழித்து கொள்ளுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆசாரியனுடைய வஸ்திரங்களை
பரிசுத்த வஸ்திரங்கள் என்று வேதம் சொல்லுகிறது ( யாத் 28 : 2-4 ).
இந்த ஆசாரியனின் வஸ்திரங்கள் மேல் ரத்தம்
தெளிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டது ( லேவி 8 : 30 ) பரிசுத்தமாக்கப்பட்டது.
வெளி 7 : 14 ல் சொல்லப்பட்ட படி ஆட்டுக்குட்டியின் ( இயேசுவின் )
ரத்தத்தினால் தான் இந்த வஸ்திரம் பரிசுத்தமாக்கப்பட்டது. எனவே எக்காலத்திலும் ,
ஆசாரியன் இந்த பரிசுத்தத்தை இழந்து போக கூடாது....
3. ஆசாரியன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போகக் கூடாது
:- லேவி 1௦:7
ஆசாரியனுக்கு
வேலை தேவனுடைய கூடாரத்தில் தான் என்பதை மறந்து போக கூடாது....எந்த நேரம் மக்கள்
பலி செலுத்த வந்தாலும், அந்த ஊழியத்தை நிறைவேற்ற ஆசாரியன் கூடாரத்தில்
இருக்கவேண்டும். கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் ( எரேமி 48 : 10 ) . எனவே , ஆசாரியன் தேவனுடைய வீட்டை அல்லது சபையை குறித்த
உத்திரவாதம் உள்ளவனாக இருக்கவேண்டும்...
4 . கர்த்தர் சொன்னவைகளை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும் :-
லேவி 1௦ : 1௦ - 11
ஆசாரியன்
கடமைக்காய் பிரசங்கம் பண்ணுகிறவனாய் அல்லது தனது சொந்த புத்தியில் இருந்து எடுத்து
பேசுகிறவனாய் இருக்கக்கூடாது. பரிசுத்தம் உள்ளதற்கும் , பரிசுத்தம் இல்லாததற்கும்
, தீட்டுள்ளதற்க்கும் , தீட்டில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படி கர்த்தர் சொன்ன
பிரமாணங்களை போதிக்கிறவனாய் இருக்கவேண்டும்....
தொடரும்......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக