வியாழன், செப்டம்பர் 29, 2011

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் ...?



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

வேதம் சொல்லுகிறது " பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்செருபாபேலுக்கு முன்பாக சம்பூமியாவாய்தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்அதற்க்கு கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்"  -  சகரியா  4 : 7


பிரியமானவர்களே இந்த செருபாபேல் மற்றும் ஆசாரியனாகிய யோசுவாவும் சிறையிருப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை எருசலேமுக்கு நடத்தி வந்து முதலாவது ஒரு பலிபீடத்தை கட்டி பலி செலுத்தின பிறகு தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள்.   ஆனால் சத்துருக்கள் நிமித்தம் 16  வருடங்கள் அந்த வேலை தடைபட்டதுஅது ஒரு பெரிய மலை போன்ற சோதனை தான் அவர்களுக்கு.   ஆனால் 16  வருடங்கள் கழித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த தீர்க்க தரிசன வாக்கியங்களின் படியே , அந்த பெரிய மலை போன்ற சோதனையை தகர்த்து அந்த ஆலயத்தை கட்டி முடித்தார்கள்.

பிரியமானவர்களே..,   இதை போல பெரிய மலை போன்ற சோதனைகள் உங்கள் முன்பு இப்பொழுது காணப்படலாம்.   என்ன செய்வது என்று நீங்கள் திகைத்து நிற்கலாம்.   இந்த பெரிய மலையை தாண்டி எப்படி என்னால் நடக்க முடியும் என்று நினைக்கலாம்.   ஆண்டவர் இன்று சொல்லுகிற வார்த்தை என்ன தெரியுமா " மலை போன்ற பிரச்சினையே நீ என் பிள்ளைக்கு முன்பாக எம்மாத்திரம் ..?   நீ சம பூமியாவாய்"    ஆமென் ..

வார்த்தையை விசுவாசியுங்கள் .   வார்த்தையை அறிக்கை செய்யுங்கள் ..    உங்கள் முன்பு இருக்கும் பெரிய பர்வதம் சமபூமியாவதை காண்பீர்கள்.   பலன் கொண்டு திடமனதாயிருங்கள் .   உலகத்தில் இருப்பவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர்.   ஆமென்.   கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.   

உங்கள் ஜெபதேவைகளை எங்களுக்கு எழுதலாமே ...
எங்கள் E -மெயில் அட்ரஸ் : yesuperiyavar@yahoo.com

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

YOU ARE WORTH - நீங்கள் விஷேசித்தவர்கள்



My Dear Brother & My Sister,

Greetings in the wonderful name of our Lord & Our Saviour Jesus Christ.

Today we will see Luke 12 : 6 & 7. The Bible says “Are not 5 sparrows sold for two pennies? Yet not one of them is forgotten by God.  Indeed, the very hairs of your head are all numbered. Don’t be afraid: you are worth more than many sparrows”

Such a wonderful words these are.  I am very much wondering that God says you are worth than Sparrows. Can you accept these words…? Why God used a small creature here..?  Is it not…?

Come on… Let us meditate this … really the sparrows are worthless in this world.  But Bible gives a special place for this.  In Psalms 84 : 3 , we can see “ Even the Sparrow has found a home, and the swallow a nest for herself, where she may have her young a place near your altar…..”

The alter was in Holy Place where ordinary people can not go.  Only the anointed priests can go to serve the God.  But the Bible says the sparrows had a nest near the alter. See the importance Bible is giving to the sparrows.

But Jesus says “ You are worth than many sparrows”  That means you are special to HIM and He allows you to enter not only into Holy place but to the THRONE OF GRACE which was kept in Most Holy Place. Amen. 

Bible says in Hebrews 4 : 16 , “ Let us then approach the Throne of Grace with confidence , so that we may receive mercy and find grace to help us in our time of need”

You are really worth than many sparrows. Why you know, you have been gained by HIM by HIS precious blood. You are a special person to HIM. You are tears are precious..  your prayer is precious.  Your words of faith are precious.

Dear Brother & Sister, you are precious in HIS sight.  He will not leave and forsake you until the fulfillment of HIS Prophecies.

God Bless You..





ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

இன்றைக்கு நாம் லூக்கா 12 : 6  & 7  வசனங்களை தியானிப்போம்வேதம் சொல்லுகிறது ,  " இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவாஅவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை.   உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறதுஆகையால் பயப்படாதிருங்கள்அநேகம் அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நீங்கள் விஷேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

எவ்வளவு அற்புதமான வார்த்தைகள்..!   ஆண்டவர் குருவிகளை விட நீங்கள் மேலானவர்கள் என்று சொல்லுவதை பார்க்க ஆச்சரியமாய் உள்ளதுஉங்களால் இதை ஏற்று கொள்ள முடிகிறதாஏன் ஆண்டவர் ஒரு சிறிய உயிரை இங்கு பயன்படுத்துகிறார். .  இல்லையா...?

வாருங்கள் நாம் இதை தியானிப்போம்.   உண்மையிலே இந்த குருவிகள் உலகின் பார்வையில் அற்பமானது தான்ஆனால் வேதம் ஒரு முக்கிய இடத்தை இந்த குருவிகளுக்கு கொடுக்கிறது.   சங்கீ 84 : 3  சொல்லுகிறது , " ....... உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு கூடும் ....... கிடைத்ததே"

இந்த பலிபீடம் சாதாரணமான மக்கள் பிரவேசிக்க முடியாத பரிசுத்த ஸ்தலத்தில் உள்ளது.   ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது இந்த குருவிகள் பரிசுத்த ஸ்தலத்தில் கூடு வைத்திருந்தது.   வேதம் இதற்க்கு  கொடுக்கிற முக்கியத்தை பாருங்கள்

இயேசு சொல்லுகிறார் இந்த குருவிகளை பார்க்கிலும் விஷேசித்தவர்கள்.   அவர் உங்களை பரிசுத்த ஸ்தலத்திற்குள் மாத்திரம் அல்ல கிருபாசனம் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அழைத்து செல்கிறார்.   ஆமென்.

எபிரேயர் 4 : 16  சொல்லுகிறது ,  " ...நாம் இரக்கத்தை பெறவும் , ஏற்ற சமயத்தில் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசன்த் தண்டையில் சேரக்கடவோம்"

உண்மையிலே நீங்கள் குருவிகளை பார்க்கிலும் விசேஷித்தவர்கள்.   ஏன் தெரியுமா..?    நீங்கள் அவருடைய விலையேறப் பெற்ற ரெத்தத்தினாலே மீட்கபட்டவர்கள்.   உங்கள் கண்ணீர் விலையேறப் பெற்றதுஉங்கள் ஜெபங்கள் விலையேறப் பெற்றதுஉங்கள் விசுவாச வார்த்தைகள் விலையேறப் பெற்றது

பிரியமானவர்களே ,   நீங்கள் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்களாய் இருப்பதினால் அவர் உங்களுக்கு சொன்னதை செய்யும் வரை உங்களை விட்டு விலகவும் உங்களை கைவிடவும் மாட்டார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

PRAISE IS PLEASANT - துதித்தலே இன்பம்


Greetings to all of you in the precious name of our Lord and our Saviour Jesus Christ. 

Dear Brothers & Sisters,  in Holy Bible Psalms 147 : 1 says “ Hallelujah! How good it is sing to our god, for praise is pleasant and lovely”

What a wonderful words these are…   Before the creation of human being, angels were singing and praising Him.  Our God’s throne is in the midst of praises.  Once a group of angels committed sin against God,   God created man in his own image and kept him in the garden of Eden.  Why you know…. ?  to praise Him and to walk with Him.

In most of time, when we are happy, we love to praise but in our unfortunate days, we used to keep quiet.  But king David says in Psalm 34 : 1 “ I will praise the Lord at all times…” … Yes he wrote these words when he was in distress.

Why we have to praise Him always..?  You know one thing ..?  when we are praising Him many miracles are taking place in our life…

Very shortly, let us meditate Acts 16: 25  About midnight Paul and Silas were praying and singing hymns to God…”

No need to explain the situation over here. When we read vs from 22 – 24 , we can see that they were beaten and put in to jail and their feet were secured in the Stock…. Very pathetic situation…   But see the power of Praise…

1.  All the door were opened.  When you s praise ,  remember “ God is going to open the door which is shut before you…”

2. Everyone’s chain came Loose :  When you praise … be happy .. God is going to loose all your chains.. it may be Sin , Evil forces , poverty , uncertain life…. God will break the bondages and will set you free.

That is why  Kind David Says   “ PRIASE IS PLEASANT AND LOVELY “…

May god bless you all…
ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.  

பிரியமான சகோதர சகோதரிகளே .., பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 147 : 1  சொல்லுகிறது ..."  கர்த்தரை துதியுங்கள் ; நம்முடைய தேவனை கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது , துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது "

எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவைமனிதனை உண்டாக்குவதற்கு முன்பு தூதர்கள் ஆண்டவரை பாடி துதித்து வந்தார்கள்நம்முடைய தேவனின் சிங்காசனம் துதிகளின் மத்தியில் உள்ளது .   ஒரு கூட்டம் தூதர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த போது , தேவன் மனிதனை அவரது சொந்த சாயலாக படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார்ஏன் தெரியுமா...?  அவரை துதித்து அவரோடு நடக்கும் படியாக ...

ஆனால் நம்முடைய வாழ்வில் நாம்  சந்தோசமாக இருக்கும் போது துதிக்கிறோம் ,   துக்க நேரங்களில் அமைதியாய் இருக்கிறோம்ஆனால் தாவீது ராஜா  சங்கீதம் 34 : 1 ல் சொல்லுகிறார் " கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்   ஆம்இந்த  வார்த்தைகளை  எழுதும்  போது  அவர்  சொல்லொண்ணா  துக்கத்தில் இருந்தார் .

   
வெகு சீக்கிரமாக அப்போஸ் 16  :  25  யை தியானிப்போம் " நடு ராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி தேவனை துதித்து பாடினார்கள்"

இந்த சூழ்நிலையை விவரிக்க தேவையில்லைஅவர்கள் அடிக்கப்பட்டு , கால்கள் தொழு மரத்தில் மாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்பரிதாபமான சூழ்நிலைஆனால் துதியின் வல்லமையை பாருங்கள்

1 .  கதவுகள் திறவுண்டது :   துதிக்கும் போது நீங்கள் நினைத்து கொள்ளுங்கள் உங்கள் முன்பு அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் திறப்பார் .

2 .எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று நீங்கள் துதிக்கும் போது கர்த்தர் உங்கள் பாவக் கட்டுகள் , பிசாசின் கட்டுகள்வறுமை என்ற கட்டுநிச்சயமில்லா எதிர்காலம் என்ற கட்டுகள் எல்லாவற்றிலும் இருந்து உங்களை விடுவிப்பார்.

அதனால் தான் தாவீது ராஜா சொல்லுகிறார் " துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது "

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக



COME .....!  LET US PRAISE & WORSHIP HIM TOGETHER 
                                                                             

திங்கள், செப்டம்பர் 12, 2011

Who will roll away ..? - யார் புரட்டி தள்ளுவான் ?


Who will roll away for me …? This is the common question asked by lot of people.

In Bible Mark 16 : 3,  three ladies are asking this question while seeing stone which was in the entrance of the tomb.

I do astonish about this question.  The Bible says , the stone was very big and unable to be moved. But these ladies were helpless , weak and did not have any strength to roll the stone.

Many times , when we are seeing  such rocks ( Which is blocking our blessings ) infront of our eyes, we used to feel, it is so heavy , so large to me. I can not roll it. Then who can roll it for me…?

The Bible gives answer to this question in Mathew 28 , “ An angel rolled back the stone..”  It is how wonderful that God is supporting us by sending His angels.

We have to believe that Angels are not only created for worshipping God but they are assigned a job to work for the man who believes God. Is it beautiful …?

When we see II Kings chapter 19 , King Hezekiah was helpless when he was surrounded by the Army of Assyria. In Vs 3, He Says , “ Today is day of distress, rebuke and disgrace, for children have come to point of birth, but there is no strength to deliver them”

But Vs 35 says ‘ That night an angel of the lord went out and struck down 1,85,000 in the camp of Assyrians’

Dear beloved, never dismay in your life. Hold your faith on God, He will send His angels and roll away all the rocks, which you can not roll away.

May God Bless you…
யார் எனக்காக இதை செய்வார் ...?   அனைத்து தரப்பு மக்களும் பொதுவாக இந்த வார்த்தைகளை சொல்லுவதை கேட்டிருக்கிறேன்

பரிசுத்த வேதத்தில் மாற்கு 16 : 3 ல் , கல்லறையை அடைத்திருந்த கல்லை பார்த்தபோது இந்த வார்த்தைகளை சொல்லுகிறதை நாம் பார்க்க முடியும்.

இந்த கேள்வி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திற்றுபரிசுத்த வேதம் சொல்லுகிறது ' அந்த கல் மிகவும் பெரியதும் புரட்ட கூடாததுமாயிருந்ததுஆனால் இந்த பெண்களுக்கு இந்த கல்லை புரட்டி தள்ளுவதற்கு பலனும் இல்லை உதவியும் இல்லை.

பல சமயங்களில் இதே போன்ற பெரிய கற்களை  ( ஆசீர்வாதத்தை தடுக்கிற காரியங்கள்நம் கண்களுக்கு எதிராக பார்க்கும் போது , நாமும் இந்த கல்லை என்னால் புரட்ட முடியாதுஆனால் எனக்காக புரட்ட யாராவது உண்டா என கேட்கிறோம்.


பரிசுத்த வேதம் இதற்க்கு பதிலை மத்தேயு 28 ம் அதிகாரத்தில் கொடுக்கிறது.   ஒரு தூதன் இறங்கி அந்த கல்லை புரட்டி தள்ளினான்கர்த்தர் நமக்காக தூதர்களை அனுப்பி சகாயம் செய்வது எவ்வளவு ஆச்சரியம் ...!


தூதர்கள் ஆண்டவரை ஆராதிக்க மாத்திரமல்ல நமக்கு பணிவிடை செய்யவும் தான் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் .

II  ராஜா 19 ம் அதிகாரத்தில் , அசீரிய ராணுவத்தால் தான் சூழப்பட்டிருந்த போதுஎசேக்கியா ராஜாவும் சகாயமற்ற நிலையில் தான் இருந்தார்.   3 ம் வசனம் சொல்லுகிறதுஇந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அனுபவிக்கிற நாள்பிள்ளைபேறு நெருங்கி இருக்கிறது . பெறவோ பெலனில்லை"

ஆனால் 35 ம் வசனம் சொல்லுகிறது " அந்த ராத்திரியிலே கர்த்தருடைய தூதன் 185000  அசீரீயர்களை அழித்து போட்டான் "

பிரியமானவர்களே .. ஒரு போதும் சோர்ந்து போக வேண்டாம்.   ஆண்டவரிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள்.   உங்களால் தள்ள முடியாத கற்களை கர்த்தர் தமது தூதனை அனுப்பி தள்ளி போடுவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக