“ FEAR NOT “ - 366 Times this wonderful word is promised in Holy Bible. Just imagine how wonderful this is….!, daily God is comforting us with this word “FEAR NOT” ..! In Holy Bible , Matthew 14 : 24 – 32 describes a wonderful incident happened in the life of Peter. Vs 24 says – wind was against them Vs 25 says – Early Morning 3’ O Clock Vs 26 says – Disciples were terrified. Vs 29 says – Peter started walking on the water. Vs 30 says – Peter beginning to Sink & cried out.Beloved Brother & Sister, when reading this passage very carefully, we can understand one thing. Peter saw the strength of wind and was afraid. In your life also , you may have various winds which is Stronger & Stronger ( fear about future , peace less life , problems what you are facing in your daily life) But can I tell you a truth.., a Loving God is standing in front of you and saying “FEAR NOT I AM WITH YOU” He did not allow peter to sink in to the problem , He rescued him by His righteous right hand. | பயப்படாதிருங்கள் “ – பரிசுத்த வேதம் 366 முறைகள் இந்த வார்த்தைகளை கூறுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வார்த்தைகளை தேவன் நம்மை பார்த்து கூறுவது எவ்வளவு அற்புதமானது...! பரிசுத்த வேதத்தில் , மத்தேயு 14 : 24 - 32 வரையிலும் பேதுருவின் வாழ்வில் நடந்த அருமையான ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. வச 24 சொல்கிறது : காற்று எதிராயிருந்தது வச 25 சொல்கிறது : இரவின் நாலாம் ஜாமம் வச 26 சொல்கிறது : சீஷர்கள் கலக்கமடைந்தார்கள் . வச 29 சொல்கிறது : பேதுரு ஜலத்தின் மேல் நடந்தான். வச 30 சொல்கிறது : பேதுரு மூழ்கி போகையில் கதறினான் பிரியமான சகோதரனே சகோதரியே, இந்த சம்பவத்தை கவனமாக பார்க்கும் போது ஒரு காரியம் புலப்படுகிறது. தன் வாழ்வில் எழும்பிய எதிர்காற்றை பார்த்த போது பேதுரு கதறினான். உங்கள் வாழ்விலும் பல எதிர்காற்றுகள் காணப்படலாம் ( எதிர்காலத்தை குறித்த பயம், சமாதானமிலாத வாழ்வு , அன்றாட போராட்டங்கள் ) ஓருண்மையை நான் சொல்கிறேன் .. ஒரு அன்பின் தேவன் உங்களுக்கு முன்பாக நின்று சொல்கிறார் " பயப்படாதே ... நான் உன்னோடு இருக்கிறேன் " அவர் பேதுருவை மூழ்கி போவதற்கு அனுமதிக்கவில்லை. தன் நீதியின் வலக்கரத்தால் தாங்கினார். போராட்டங்களை பார்க்காதீர் ... அவரை நோக்கி பாருங்கள் .... அவர் சொல்கிறார் “ பயப்படாதிருங்கள்" |
வெள்ளி, செப்டம்பர் 02, 2011
FEAR NOT - பயப்படாதிருங்கள் - பாகம் 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக