திங்கள், செப்டம்பர் 05, 2011

Stand in the gap for Japan - ஜப்பானுக்காய் திறப்பில்



கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு குட்டி தீவு தான் நிப்பான் என்னப்படும் ஜப்பான். கிட்டத்தட்ட 377835 .கிமீ பரப்பளவு உடையது. சுமார் 15 கோடி ஜனங்கள் வசிக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த குட்டி தீவு சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.


கடந்த நாட்களில் நிகழ்ந்த பெரும் பூகம்பம், அதை தொடர்ந்து நிகழ்ந்த சுனாமி போன்றவை இந்த தீவை ஒரு பாடுபடுத்திவிட்டது . இதனால் ஜீவனை, வீட்டை, சொந்தங்களை இழந்தவர்கள் பல பேர்.


இந்த சோகங்கள் ஆறும் முன் கடுமையான சூறாவளி காற்றினால் கடும் மழை , வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது இந்த குட்டி நாடு


இந்த நாட்டிற்காய் நாம் திறப்பிலே நிற்க வேண்டிய அவசியம் வந்தாகிவிட்டது. பரிசுத்த வேதத்தில் எசேக்கியல் 22 : 30 யை வாசித்து பாருங்கள். " நான் தேசத்தை அழிக்காதபடிக்கு திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந் தக்கதாக ஒரு மனுஷனை தேடினேன். ஒருவனையும் காணேன் " என்று சொல்லுகிறது.

இந்த ஜப்பானிய சகோதர சகோதரிகளை நம் கண்கள் காணவில்லை என்றாலும் , ஒரு நிமிடம் அவர்களுக்காக ஜெபிப்போமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக