ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

PRAISE IS PLEASANT - துதித்தலே இன்பம்


Greetings to all of you in the precious name of our Lord and our Saviour Jesus Christ. 

Dear Brothers & Sisters,  in Holy Bible Psalms 147 : 1 says “ Hallelujah! How good it is sing to our god, for praise is pleasant and lovely”

What a wonderful words these are…   Before the creation of human being, angels were singing and praising Him.  Our God’s throne is in the midst of praises.  Once a group of angels committed sin against God,   God created man in his own image and kept him in the garden of Eden.  Why you know…. ?  to praise Him and to walk with Him.

In most of time, when we are happy, we love to praise but in our unfortunate days, we used to keep quiet.  But king David says in Psalm 34 : 1 “ I will praise the Lord at all times…” … Yes he wrote these words when he was in distress.

Why we have to praise Him always..?  You know one thing ..?  when we are praising Him many miracles are taking place in our life…

Very shortly, let us meditate Acts 16: 25  About midnight Paul and Silas were praying and singing hymns to God…”

No need to explain the situation over here. When we read vs from 22 – 24 , we can see that they were beaten and put in to jail and their feet were secured in the Stock…. Very pathetic situation…   But see the power of Praise…

1.  All the door were opened.  When you s praise ,  remember “ God is going to open the door which is shut before you…”

2. Everyone’s chain came Loose :  When you praise … be happy .. God is going to loose all your chains.. it may be Sin , Evil forces , poverty , uncertain life…. God will break the bondages and will set you free.

That is why  Kind David Says   “ PRIASE IS PLEASANT AND LOVELY “…

May god bless you all…
ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.  

பிரியமான சகோதர சகோதரிகளே .., பரிசுத்த வேதத்தில் சங்கீதம் 147 : 1  சொல்லுகிறது ..."  கர்த்தரை துதியுங்கள் ; நம்முடைய தேவனை கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது , துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது "

எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவைமனிதனை உண்டாக்குவதற்கு முன்பு தூதர்கள் ஆண்டவரை பாடி துதித்து வந்தார்கள்நம்முடைய தேவனின் சிங்காசனம் துதிகளின் மத்தியில் உள்ளது .   ஒரு கூட்டம் தூதர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த போது , தேவன் மனிதனை அவரது சொந்த சாயலாக படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார்ஏன் தெரியுமா...?  அவரை துதித்து அவரோடு நடக்கும் படியாக ...

ஆனால் நம்முடைய வாழ்வில் நாம்  சந்தோசமாக இருக்கும் போது துதிக்கிறோம் ,   துக்க நேரங்களில் அமைதியாய் இருக்கிறோம்ஆனால் தாவீது ராஜா  சங்கீதம் 34 : 1 ல் சொல்லுகிறார் " கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்   ஆம்இந்த  வார்த்தைகளை  எழுதும்  போது  அவர்  சொல்லொண்ணா  துக்கத்தில் இருந்தார் .

   
வெகு சீக்கிரமாக அப்போஸ் 16  :  25  யை தியானிப்போம் " நடு ராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணி தேவனை துதித்து பாடினார்கள்"

இந்த சூழ்நிலையை விவரிக்க தேவையில்லைஅவர்கள் அடிக்கப்பட்டு , கால்கள் தொழு மரத்தில் மாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்பரிதாபமான சூழ்நிலைஆனால் துதியின் வல்லமையை பாருங்கள்

1 .  கதவுகள் திறவுண்டது :   துதிக்கும் போது நீங்கள் நினைத்து கொள்ளுங்கள் உங்கள் முன்பு அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் திறப்பார் .

2 .எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று நீங்கள் துதிக்கும் போது கர்த்தர் உங்கள் பாவக் கட்டுகள் , பிசாசின் கட்டுகள்வறுமை என்ற கட்டுநிச்சயமில்லா எதிர்காலம் என்ற கட்டுகள் எல்லாவற்றிலும் இருந்து உங்களை விடுவிப்பார்.

அதனால் தான் தாவீது ராஜா சொல்லுகிறார் " துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது "

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக



COME .....!  LET US PRAISE & WORSHIP HIM TOGETHER 
                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக