Once upon a time, a man was traveling through an Ocean by Ship. He was so pious and a truthful person. Suddenly, the ship hit a glacier and started to sink. As it was a winter season, many people traveled with him died there itself. But this man escaped with a help of wreckage of ship. After 3 days, he reached an Island, where no man was living. He cried to God “Why this had happened to me”. Then he comforted himself and made a small hut with the leaves of the Island. He used to catch some fishes and eat them for his hungry. One while he was fishing, he turned back to his hut and found, it was on fire and smoke started to come from that. He cried to Lord, “Lord why this has happened to me”. While he was crying for hours together, he saw a man coming to him through a boat. He astonished like anything. The man was picked up by the boat and was boarded on a passenger ship after 2 hours. When he reached the board, he asked the captain of the ship “How you found me?”. The captain replied “I was watching something with my Binocular. Immediately I saw the smoke is coming from the Island. So I send my man and brought you over here” The man felt so bad and cried to God with overwhelming thanks “Oh .. God…! If my hut was not on fire, how this help would have come’
In Holy Bible , Romans 8 : 28 says “ We know that all things work together for the good of those who love God : those who are called according to His purpose” | ஒரு முறை ஒரு மனிதன் கடலில் கப்பல் மூலமாக பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் மிகவும் உண்மையுள்ள பயபக்தியுள்ள மனிதன். தீடீரென அந்த கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. அது ஒரு குளிர் காலமாய் இருந்தபடியால் அவனுடன் பயணம் செய்த அநேகர் மறித்து போனார்கள். ஆனால் இந்த மனிதன் கப்பலின் உடைந்த ஒரு பாகத்தை பிடித்துக்கொண்டு போராடினான். 3 நாட்கள் கழித்து ஆளரவமற்ற ஒரு தீவை சென்றடைந்தான். அவன் தன்னை படைத்த தேவனை நோக்கி கதற ஆரம்பித்தான் " தேவனே எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்". தன்னை தானே தேற்றி கொண்டு அந்த தீவில் உள்ள இலைகளை பயன்படுத்தி ஒரு சிறிய குடிசையை கட்டி அதில் வாழ தொடங்கினான். அங்கு தினமும் மீன்களை பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் மீன் பிடித்து கொண்டிருந்த போது , அவனது சிறிய குடிசை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அவன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை. பல மணி நேரங்கள் அவன் அலுத்து கொண்டிருத்த போது , ஒரு சிறிய படகு அவனை நோக்கி வருவதை பார்த்தான். அந்த படகு அவனை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய கப்பலில் கொண்டு பொய் சேர்த்தது. அந்த கப்பலில் ஏறியவுடன் , அந்த கப்பலின் மாலுமியை பார்த்து கேட்டான் " நான் இங்கு இருக்கிறேன் என்பது எப்படி தெரியும்" . அந்த மாலுமி சொன்னார் " நான் எனது தொலைநோக்கியில் பார்த்து கொண்டிருந்த போது , தீடீரென கரும் புகை எழுவதை பார்த்தேன். அதனால் தான் நான் ஒரு நபரை அந்த இடத்திற்கு அனுப்பினேன். இந்த மனிதன் மறுபடி தேவனை பார்த்து நன்றியோடு கதற ஆரம்பித்தான் " தேவனே என் குடிசை எரிந்திருக்காவிடில், எனக்கு இந்த உதவி கிடைத்திருக்காதே"
பரிசுத்த வேதம் ரோமர் 8 : 28 ல் சொல்லுகிறது " அன்றியும் அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்"
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக...!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக