புதன், அக்டோபர் 26, 2011

வெளிச்சத்துக்காக காத்திருக்கிறோம்

பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.  இன்றும் பரிசுத்த வேதத்தில் இருந்து ஒரு நல்ல வேத பகுதியை நாம் தியானிக்கலாம்    ஏசாயா  59 : 9 ம் வசனம் சொல்லுகிறது . " வெளிச்சத்துக்கு காத்திருந்தோம்  , இதோ இருள் ;  பிரகாசத்துக்கு காந்திருந்தோம் ;  ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம் .."


அநேகம் பேரை அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கும் போதும் ,  அவர்களிடத்தில் பேசும்போதும் ஒரு காரியத்தை சொல்ல கேட்டிருக்கிறேன் .  நான் மிகவும் ஒரு நல்ல வாழ்வை விரும்புகிறேன் .. ஆனால் என் வாழ்க்கை முழுவதும் அந்தகாரமாகவே ( இருளாகவே ) இருக்கிறது என்று .   உண்மையில் இருதயத்தில் அல்லது வாழ்வில் இருள் வந்துவிட்டால் அந்த வாழ்வில் சந்தோசம் இருக்காது ,  நல்ல சமாதானம் இருக்காது .    இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான் (  யோவான் 12  : 35 )  என்றும்  ,    இருளில் கொள்ளைநோய் நடமாடும் ( சங்கீ 91 : 6 ) என்றும் பல இடங்களில் இருளின் வாழ்க்கையை குறித்து பரிசுத்த வேதம் சொல்லுகிறது .   

இந்த இருள் மனிதனுக்குள் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியாத நண்பர்கள் அநேகர் உண்டு.   பாருங்கள்  சத்துரு என்னை இருளில் இருக்கப் பண்ணுகிறான் ( சங்கீ 143  : 3 ) ,     மூடன் ( அறியாமை ) இருளில் நடக்கிறான் ( பிரசங்கி 2 :  14 ) ,   துன்மார்க்கர் இருளில் மௌனமாவார்கள்  ( 1 சாமு 2 : 9 ) என்று பரிசுத்த வேதம் ஏன் மனிதனுக்கு இருள் உண்டாகிறது என போதிக்கிறது.  

பிரியமானவர்களே  , நாம் செய்கிற சில காரியங்கள் தேவனுடைய பார்வையில் ஆகாததாய் இருக்கும்போதும்  , பிசாசின் போராட்டம் அதிகமாகும் போதும்  ,  நம்முடைய அறியாமையில் நாம் செய்கிற சில பாவங்கள் நிமித்தமும் இருளான /  அந்தகாரமான வாழ்க்கைக்குள் நாம் கடந்துவருகிறோம் .  அதனுடைய பாதைகள் எவ்வளவு வேதனை நிறைந்து காணப்படுகிறது என்பதை அறிந்தும் இருக்கிறோம்.    இந்த இருளில் இருக்கும் அநேக ஜனங்கள் ஒரு வெளிச்சத்துக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் அது மாதிரம்மல்ல அந்த வெளிச்சத்தை கண்டுகொள்ள முயற்சி செய்கிறார்கள்.
ஒரு எளிய காரியத்தை தான் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் .  இந்த இருள் வெளிச்சமாக மாற வேண்டுமெனில் வெளிச்சத்தை கொடுக்கிற இடத்தை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.    பரிசுத்த வேதம் யோவான் 1  : 9 ல் சொல்லுகிறது ,  "  உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி " .   ஆமென் .    இந்த உலகத்திலே மனிதனாய் பிறந்த ஆண்டவர் ஏசுவே இந்த உலகத்தில் வெளிச்சமாயிருக்கிறார்.    யோவான் 1 : 4 ம் வசனம் சொல்லுகிறது  , " அவருக்குள் ஜீவன் இருந்தது , அந்த ஜீவன் மனுசருக்கு ஒளியாயிருந்தது " 

இருளிலே கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என மீகா 7 : 8  ,   கர்த்தர் என இருளை வெளிச்சமாக்குகிறவர் என 2 சாமு 22 : 29  மற்றும் சங்கீ 18 : 28  ,  என்னை பின்பற்றுபவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்  என யோவான் 8 : 12  எனவும் பரிசுத்த வேதம் சொல்லுகிறது .

பிரியமானவர்களே இருளின் ( பிசாசின் ) அதிகாரத்தில் இருந்து நம்மை விடிவிக்கும் படியாகவே ஆண்டவர் இயேசு நமக்காக சிலுவையில் தம் ஜீவனியும் தந்தார்.   நாம் நம்முடைய பாவங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு அவரை நம் உள்ளத்தில் ஏற்றுகொண்டால் நம்முடைய இருளான வாழ்வை அவர் மாற்றிபோட்டு ,  இருளின் அதிகாரங்களுக்கு நம்மை அவர் விலக்கி ,  வெளிச்சத்தின் பிள்ளைகளாக நம்மை மாற்றி நம்முடைய பாவ ,  சாப ,  வியாதி கட்டுகளை அறுத்து நம்மை உயர்த்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .


ஒரு சிறிய ஜெபத்தை செய்வோமா ...?  

எங்கள் அன்புள்ள பரலோக பிதாவே  ,  இந்த வேளைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம் .   எங்கள் அந்தகாரங்களினால் நாங்கள் படுகிற வேதனைகளை நீர் அறிந்திருக்கிறீர் .  எங்கள் பாவங்களையும் ,  சாபங்களையும் தயை கூர்ந்து நீர் மன்னித்து  , எங்களை ரட்சியும் .  நீர் இந்த உலகத்தின் ரட்சகர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம் .  நீர் எங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் இப்பொழுது இருக்கிறீர் என்பதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் .  பாவத்தின் மூலமாக ,  சாபத்தின் மூலமாக எங்கள் வாழ்வில் உள்ள எல்லா போராட்டங்களையும்  , வியாதிகளையும்  , சமாதான சீர்கேடுகளையும் எங்களை விட்டு அகற்றி வ்ளிச்சத்தின் ஆசீர்வாதங்களினால் எங்களை நிரப்பும் என கெஞ்சி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே ... ஆமென்..

பிரியமானவர்களே .... கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்டு உள்ளார் .  உங்களை அவர் ஆசீர்வதிப்பார் .   ஆமென்.


வியாழன், அக்டோபர் 13, 2011

MY SOUL PRAISE THE LORD - என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி


Greetings to all of you in the precious name of our Lord and our Saviour Jesus Christ. 

Dear Brothers & Sisters,  in Holy Bible Psalms 103 : 1 & 2 says “ My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name.  My Soul praise the Lord, and do not forget all His benefits.”
(Holman Christian Standard bible)

Amen..  I love these words.  Its great to meditate the goodness of our God in our life.  Some times, we pray and He answers.  But you know one special thing? Without our prayer, He does many good things to our soul.

Let us see the things.

Vs 3 says “ He forgives all your sins”.  Of course, we believe God has cleansed our sins.  But god shown me a special passage from the Holy bible in this regard.  Let us go to II Samuel 5: 1 to 8.  David captured Zion and he despised the lame and the blind. It is said , “ the lame and the blind will never enter the house”.

You know the secret behind this. Jerusalem , the place of God was forbidden to the lame & blind. Who is Blind..?  we… Yes  we were blind by satan ( II Cor 4 : 4). Who is lame ..? we .. we had a wonderful Christian name .., but we were unable to walk to God and walk for God..

But in new testament , thank god .. a wonderful incident had been narrated by our Lord Jesus Christ.

Yes … Come on let us go to … Luke 14 : 15 – 24.  Just read the passage.  When the called people hesitated to join the kingdom of God,  Vs 21 says “ bring here the blind and the lame…”  amen..

Dear Brothers & Sisters , John 1 : 11 says “ He came to His own and His own people did not receive Him..”.  then God decided to call not by our faith but by His grace and made a permanent place in his House. Amen.. Halleluiah …!

See John 1 : 12 , 13 says ,” …. You are children of God.. and you are born of God..” Amen…

Is it great to meditate to these words, “ He has forgiven my sin and made me as HIS SON”

“My Soul , Praise the Lord , and all that is within me, praise HIS holy name.  My Soul praise the Lord, and do not forget all His benefits”

Amen .  Message continues in the coming days.   May god bless you.  



ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.  

பிரியமான சகோதர சகோதரிகளே ,  சங்கீதம் 103 : 1 & 2  சொல்லுகிறது, "  என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே"

ஆமென்இந்த வார்த்தைகளை மிகவும் நேசிக்கிறேன்கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்ப்பது மிகவும் அற்புதமான விஷயம்சில வேளைகளில் நாம் ஜெபிக்கிறோம்அவர் பதில் கொடுக்கிறார்ஆனால் உங்களுக்கு ஒரு விசேஷம் தெரியுமா..?  ஜெபிக்காமலே அவர் நம் ஆத்துமாவிற்கு அநேகம் நன்மைகளை செய்கிறார்.

அவைகளை நாம் தியானிப்போம். வசனம்சொல்லுகிறது , " அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து ..."  நாம் விசுவாசிக்கிறோம் கர்த்தர் நம் பாவங்களை மன்னித்தார் என்றுஇது விஷயமாக கர்த்தர் ஒரு விசேஷித்த வேத பகுதியை எனக்கு காண்பித்தார்.   II சாமு 5 : 1  - 8 வாசித்து பாருங்கள்தாவீது சீயோனை பிடித்தான் அவனது ஆத்துமா குருடரையும் சப்பாணிகளையும் வெறுத்ததுஅதனால் அவர்கள் சியோன் கோட்டைக்குள் பிரவேசிக்கும் தகுதி இழந்தார்கள்

இதற்க்கு பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா..?  எருசலேம் ., மகாராஜாவின் நகரம் குருடருக்கும் சப்பானிகளுக்கும் விலக்கப்பட்டிருந்ததுயார் குருடன்நாம்...  ஆம் ..II  கொரிந்தியர் 4 : 4 ன் படி பிசாசு நம்மை குருடாக்கி வைத்திருந்தான்.   யார் சப்பாணிநாம் .. ஆம்..  நல்ல கிறிஸ்தவ பெயர்கள் நமக்கு இருந்தும் கர்த்தரை நோக்கியும் கர்த்தருக்காகவும் நடக்க முடியாத சப்பாணிகள்

ஆனால் புதிய ஏற்பாட்டில் ஒரு அருமையான சம்பவத்தை நம் அருள்நாதர் விளக்கினபடியால் அவருக்கு நன்றி.

லூக்கா 14  : 15  -  24  வரை வாசித்து பாருங்கள்அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு வர தயங்கினபோது வசனம் 21  சொல்லுகிறது குருடரையும் சப்பாணிகளையும் உள்ளே கொண்டு வாருங்கள் என்று.   ஆமென்.  அல்லேலுயா.

யோவான் 1 : 11  சொல்லுகிறது , " அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை. "   அதனால் கர்த்தர் நம்முடைய விசுவாசத்தின் படி அல்ல அவரது கிருபையினால் நம்மை அழைக்க சித்தம் கொண்டு நமக்கென ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினார்ஆமென் ... அல்லேலுயா


யோவான் 1  : 12  , 13  சொல்லுகிறது " நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் , தேவனால் பிறந்தவர்கள்"

கர்த்தர் நம்மை மன்னித்து அவரது பிள்ளைகளாய் மாற்றி உள்ளார் என்பதை தியானிக்க எதனை இனிமை.



என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே"

வருகிற நாட்களில் இந்த செய்தி தொடரும்கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!





திங்கள், அக்டோபர் 03, 2011

IT IS TIME TO SHOW FAVOR - தயை செய்யும் நேரம் வந்தது



My Dear Brother & My Sister,

Greetings in the wonderful name of our Lord & Our Saviour Jesus Christ.

Today let us meditate Psalms 102 : 13 “ you will arise and have compassion on Zion, for it is time to show favor to her; the appointed time has come”

In bible, we can see many covenants & promises of God. But it is beautiful to see, there is an appointed time for the fulfillment.

God has promised Abraham to give a son at his 75th year.  But he had to wait 25 years for the fulfillment of that promise.  Just imagine … Promise is true.  It will be fulfilled at the appointed time.

In the life of Joseph, God shown him a vision at his 17th year. But he waited 13 years as a slave for the fulfillment. 

Amen… I feel overwhelming happy to declare here that God is having an appointed time for you.  Now the situations, circumstances, happenings may be entirely different from your Vision & Promise.  But my dear friend, God says to you that the appointed time has come.

Amen… you believe these words and give thanks to HIM.  You are going to see the favor of God and going to receive your blessings.

May God Bless you.


You can send your prayer request to our email yesuperiyavar@yahoo.com




ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

இன்று சங்கீதம் 102 : 13 யை தியானிப்போம்.  " தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்அதற்கு தயை செய்யும் காலமும், அதற்காக குறித்த நேரமும் வந்தது"

பரிசுத்த வேதத்தில் தேவனுடைய பல வாக்குததங்களையும் உடன்படிக்கைகளையும் நாம் பார்க்க முடியும்.   ஆனால் அது நிறைவேறுதலுக்கு குறித்த காலத்தை வைத்திருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியம்?

ஆண்டவர் ஆபிரகாமுக்கு 75 வது வயதில் ஒரு மகனை தருவதாக வாக்கு செய்தார்.   ஆனால் அந்த வாக்கு நிறைவேறுவதற்கு 25  வருடங்கள் காத்திருந்தார்.   கொஞ்சம் யோசித்து பாருங்கள்.   வார்த்தை உண்மை உள்ளதுஅது குறித்த காலத்தில் நிச்சயம் நிறைவேறும்.

யோசேப்பின் வாழ்க்கையை எடுத்து பாருங்கள்ஆண்டவர் அவருக்கு 17  வயதில் தரிசனம் கொடுத்தார்அந்த தரிசனத்தின் நிரைவேருதலுக்காக 13  வருடங்கள் அடிமையாக காத்திருந்தார்.

ஆமென்..    கர்த்தர் உங்களுக்கு ஒரு குறித்த காலத்தை வைத்திருக்கிறார் என்பதை அறிவிப்பதில் நான் மிகுந்த சந்தோசம் அடைகிறேன்.   இப்பொழுது உங்கள் வாழ்கையில் கர்த்தர் கொடுத்த வார்த்தைக்கு சம்பந்தம் இல்லாத எதோ ஓன்று நடப்பதாக தோன்றலாம் .   ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் " உனக்கு குறிக்கப்பட்ட காலம் வந்திருக்கிறதுஆமென் .

இந்த வார்த்தைகளை விசுவாசித்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள்.   நீங்கள் கர்த்தருடைய தயவை காண போகிறீர்கள்கர்த்தர் உங்களுக்கு வைத்துள்ள ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ள போகிறீர்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக


உங்கள் ஜெப விண்ணப்பங்களுக்கு