வியாழன், செப்டம்பர் 29, 2011

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் ...?



கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

வேதம் சொல்லுகிறது " பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்செருபாபேலுக்கு முன்பாக சம்பூமியாவாய்தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்அதற்க்கு கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்"  -  சகரியா  4 : 7


பிரியமானவர்களே இந்த செருபாபேல் மற்றும் ஆசாரியனாகிய யோசுவாவும் சிறையிருப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை எருசலேமுக்கு நடத்தி வந்து முதலாவது ஒரு பலிபீடத்தை கட்டி பலி செலுத்தின பிறகு தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள்.   ஆனால் சத்துருக்கள் நிமித்தம் 16  வருடங்கள் அந்த வேலை தடைபட்டதுஅது ஒரு பெரிய மலை போன்ற சோதனை தான் அவர்களுக்கு.   ஆனால் 16  வருடங்கள் கழித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த தீர்க்க தரிசன வாக்கியங்களின் படியே , அந்த பெரிய மலை போன்ற சோதனையை தகர்த்து அந்த ஆலயத்தை கட்டி முடித்தார்கள்.

பிரியமானவர்களே..,   இதை போல பெரிய மலை போன்ற சோதனைகள் உங்கள் முன்பு இப்பொழுது காணப்படலாம்.   என்ன செய்வது என்று நீங்கள் திகைத்து நிற்கலாம்.   இந்த பெரிய மலையை தாண்டி எப்படி என்னால் நடக்க முடியும் என்று நினைக்கலாம்.   ஆண்டவர் இன்று சொல்லுகிற வார்த்தை என்ன தெரியுமா " மலை போன்ற பிரச்சினையே நீ என் பிள்ளைக்கு முன்பாக எம்மாத்திரம் ..?   நீ சம பூமியாவாய்"    ஆமென் ..

வார்த்தையை விசுவாசியுங்கள் .   வார்த்தையை அறிக்கை செய்யுங்கள் ..    உங்கள் முன்பு இருக்கும் பெரிய பர்வதம் சமபூமியாவதை காண்பீர்கள்.   பலன் கொண்டு திடமனதாயிருங்கள் .   உலகத்தில் இருப்பவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர்.   ஆமென்.   கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.   

உங்கள் ஜெபதேவைகளை எங்களுக்கு எழுதலாமே ...
எங்கள் E -மெயில் அட்ரஸ் : yesuperiyavar@yahoo.com

2 கருத்துகள்:

  1. அன்புள்ள நண்பருக்கு,இயேசு கிறிஸ்த்துவின் திருப்பெயரால் என் வாழ்த்துக்கள்.உங்களின் இந்த தளத்தை இன்று தான் பார்த்தேன். மிகவும் சிறப்பாகவும், ஆத்துமாக்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது. உங்களின் இந்த பணி சிறக்க இறைவன் உங்களுக்கு அருள்புரிவாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென். அன்புடன் இம்மான்.http://waytoheaven2011.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. ஐயா தங்கள் வருகைக்கும் கனிவான கருத்துக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள் . GOD BLESS YOU

    பதிலளிநீக்கு