ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

YOU ARE WORTH - நீங்கள் விஷேசித்தவர்கள்



My Dear Brother & My Sister,

Greetings in the wonderful name of our Lord & Our Saviour Jesus Christ.

Today we will see Luke 12 : 6 & 7. The Bible says “Are not 5 sparrows sold for two pennies? Yet not one of them is forgotten by God.  Indeed, the very hairs of your head are all numbered. Don’t be afraid: you are worth more than many sparrows”

Such a wonderful words these are.  I am very much wondering that God says you are worth than Sparrows. Can you accept these words…? Why God used a small creature here..?  Is it not…?

Come on… Let us meditate this … really the sparrows are worthless in this world.  But Bible gives a special place for this.  In Psalms 84 : 3 , we can see “ Even the Sparrow has found a home, and the swallow a nest for herself, where she may have her young a place near your altar…..”

The alter was in Holy Place where ordinary people can not go.  Only the anointed priests can go to serve the God.  But the Bible says the sparrows had a nest near the alter. See the importance Bible is giving to the sparrows.

But Jesus says “ You are worth than many sparrows”  That means you are special to HIM and He allows you to enter not only into Holy place but to the THRONE OF GRACE which was kept in Most Holy Place. Amen. 

Bible says in Hebrews 4 : 16 , “ Let us then approach the Throne of Grace with confidence , so that we may receive mercy and find grace to help us in our time of need”

You are really worth than many sparrows. Why you know, you have been gained by HIM by HIS precious blood. You are a special person to HIM. You are tears are precious..  your prayer is precious.  Your words of faith are precious.

Dear Brother & Sister, you are precious in HIS sight.  He will not leave and forsake you until the fulfillment of HIS Prophecies.

God Bless You..





ஆண்டவரும் ரட்சகருமான ஏசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

இன்றைக்கு நாம் லூக்கா 12 : 6  & 7  வசனங்களை தியானிப்போம்வேதம் சொல்லுகிறது ,  " இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவாஅவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை.   உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறதுஆகையால் பயப்படாதிருங்கள்அநேகம் அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நீங்கள் விஷேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

எவ்வளவு அற்புதமான வார்த்தைகள்..!   ஆண்டவர் குருவிகளை விட நீங்கள் மேலானவர்கள் என்று சொல்லுவதை பார்க்க ஆச்சரியமாய் உள்ளதுஉங்களால் இதை ஏற்று கொள்ள முடிகிறதாஏன் ஆண்டவர் ஒரு சிறிய உயிரை இங்கு பயன்படுத்துகிறார். .  இல்லையா...?

வாருங்கள் நாம் இதை தியானிப்போம்.   உண்மையிலே இந்த குருவிகள் உலகின் பார்வையில் அற்பமானது தான்ஆனால் வேதம் ஒரு முக்கிய இடத்தை இந்த குருவிகளுக்கு கொடுக்கிறது.   சங்கீ 84 : 3  சொல்லுகிறது , " ....... உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு கூடும் ....... கிடைத்ததே"

இந்த பலிபீடம் சாதாரணமான மக்கள் பிரவேசிக்க முடியாத பரிசுத்த ஸ்தலத்தில் உள்ளது.   ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது இந்த குருவிகள் பரிசுத்த ஸ்தலத்தில் கூடு வைத்திருந்தது.   வேதம் இதற்க்கு  கொடுக்கிற முக்கியத்தை பாருங்கள்

இயேசு சொல்லுகிறார் இந்த குருவிகளை பார்க்கிலும் விஷேசித்தவர்கள்.   அவர் உங்களை பரிசுத்த ஸ்தலத்திற்குள் மாத்திரம் அல்ல கிருபாசனம் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அழைத்து செல்கிறார்.   ஆமென்.

எபிரேயர் 4 : 16  சொல்லுகிறது ,  " ...நாம் இரக்கத்தை பெறவும் , ஏற்ற சமயத்தில் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசன்த் தண்டையில் சேரக்கடவோம்"

உண்மையிலே நீங்கள் குருவிகளை பார்க்கிலும் விசேஷித்தவர்கள்.   ஏன் தெரியுமா..?    நீங்கள் அவருடைய விலையேறப் பெற்ற ரெத்தத்தினாலே மீட்கபட்டவர்கள்.   உங்கள் கண்ணீர் விலையேறப் பெற்றதுஉங்கள் ஜெபங்கள் விலையேறப் பெற்றதுஉங்கள் விசுவாச வார்த்தைகள் விலையேறப் பெற்றது

பிரியமானவர்களே ,   நீங்கள் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்களாய் இருப்பதினால் அவர் உங்களுக்கு சொன்னதை செய்யும் வரை உங்களை விட்டு விலகவும் உங்களை கைவிடவும் மாட்டார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக