திங்கள், நவம்பர் 07, 2011

உன்னத பாட்டு - வேத ஆராய்ச்சி - பாகம் ஓன்று

உன்னதப்பாட்டை பற்றிய பற்பல அபிப்பிராயங்கள் :


உன்னதப்பாட்டை குறித்து பலரும் பற்ப்பல அபிப்பிராயங்கள் கூறுவதுண்டு .   அவற்றுள் சிலர் , இப்புத்தகமானது யூதர்களின் கலியாண நாட்களில் கல்யாணதிர்க்காய் நியமிக்கப்பட்ட புருசனையும் ஸ்திரீகளையும் குறித்து புகழ்ந்து பாடி வந்த பாட்டு எனக் கூறுவார்கள் .

சிலரோ ,  ஒரு ஸ்திரியானவள் ஒரு பெண் குழந்தையை பெற்று கிச்சிலி மரத்தடியில் போட்டு விட்டு போய் விட்டாள்.  அந்த குழந்தையானது தொப்புள் அறுக்கப்படாமல் அவ்விடத்திலே கிடந்தது .  இதை கண்ணுற்ற ஒரு ஆட்டிடையன் குழந்தையின் மீது இரக்கங்கொண்டு அதின் தொப்புளை அறுத்து , கழுவி சுத்தம் செய்து அவன் வீட்டில் கொண்டு போய் வளர்த்தான் .  அந்த குழந்தை வளர்ந்து வரவே அவளை விவாகம் பண்ணி கொள்ள எண்ணினான் . இவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்ணை தனது திராட்சை தோட்டத்திற்கு காவல்க்காரியாக நியமித்து வைத்தான் .  அவள் திராட்சை தோட்டத்தை காத்து வரவே , ஒரு நாள் சாலமன் ராஜ காட்டில் வேட்டையாட சென்றிருந்தார் . அப்பொழுது அவர் திராட்சை தோட்டத்தை காத்து கொண்டிருந்த அந்த பெண்ணின் மேல் நேசம் கொண்டு அவளை அரண்மனைக்கு அழைத்து கொண்டு போனார் .  ஆனால் அரண்மனையின் சகல மேன்மைகளையும் கண்ட அந்த பெண் அவைகளின் மேல் நேசம் கொள்ளாமல்  ,  அந்த ஆட்டிடையன் மேல் உள்ள நேசத்தினால் புலம்பி கொண்டு இருந்தாள்.  இதை கண்ட சாலமன் அந்த பெண் இடையன் மேல் கொண்ட நேசத்தை அறுக்க முடியாது என்று கருதி அந்த பெண்ணை திரும்ப காட்டில் கொண்டு போய் விட்டார் என்ற சரித்திரம் கூறுவாரும் உண்டு .

சிலரோ , சாலமன் ராஜா தேவ ஆவியினால் நிரம்பியிருந்த காலத்தில் வரப்போகும் மணவாளனாகிய இயேசுவை குறித்தும்  மணவாட்டி சபையை குறித்தும் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்க தரிசன புத்தகம் எனகூருபவரும் உண்டு ..



நமது அபிப்பிராயம் :-

வேத புஸ்தகத்தில் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு  என இரு புஸ்தகங்கள் உள்ளது .  அதில் பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளது .   இந்த 39 புஸ்தகங்களிலும் தீர்க்கதரிசன பாகங்களும் உண்டு .    என்றாலும் அப்புத்தகங்களை சரித்திர புத்தகங்கள்  , தீர்க்க தரிசன புத்தகங்கள் , சங்கீத புத்தகங்கள் எனப் பிரித்து படிக்கலாம் .
 
 சரித்திர புத்தகங்களை எடுத்தால் எல்லா புத்தகங்களும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையதாக இருப்பதை காணலாம் .   ரூத்தின் சரித்திரத்தை எடுத்து கொண்டால் இப்புத்தகத்திற்கு ஏன் வேத புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்று கேட்போமானால் தாவீதின் வம்ச வரலாற்றை தெளிவுடன் அறிந்து கொள்ள இப்புத்தகம் அவசியம் .  ஆகவே சரித்திர புத்தகங்கள் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது .
 
 ஆனால் உன்னதபாட்டோ இடைப்பெண்ணின் சரித்திரமென கூறும் போது மற்ற ஆகமங்களோடு எவ்வித தொடர்பும் அந்த புத்தகத்திற்கு இல்லை.   ஒரு வேளை சாலமனின் நேசத்திற்கு ஏற்ப்பட்ட தோல்வி என கூறக்கூடுமானால் அவரின் இதர தோல்விகளை போல இதையும் குறிப்பிடலாம் .  ஆனால் சாலமோனின் தோல்வியை ஒரு புத்தகமாகி அதற்கு ஆங்கிலத்தில் " சாலமனின் பாட்டு " எனவும்  மலையாளத்தில் " உத்தம கீதம் "  எனவும் ,  தமிழில் " உன்னத பாட்டு " எனவும் பெயரிட முடியுமோ ..? ஒரு காலும் முடியாது .
 
 தமிழ் மொழி பெயர்ப்பில் இந்த புத்தகத்திற்கு உன்னத பாட்டு என்ற அழகான பெயரை வாசிக்கிற போதே இந்த புத்தகத்தின் அழகு  ஜொலிக்கிறது .   மெய்யாகவே ஆண்டவர் இப்புத்தகத்தில் உன்னதத்தில் உள்ள பொக்கிசங்களை அடக்கியே வைத்திருக்கிறார் .  ஆகவே உன்னததிர்க்குரிய பொக்கிசத்தை பூமிக்குரியதாக்கி அதன் கனத்தை குறைப்பது ஞானக் குறைவே ஆகும் . 
 
 ஆகவே இந்த புத்தகமானது  " வரப்போகிற மணவாளனாகிய இயேசுவை பற்றியும் மணவாட்டி சபையை பற்றியும் சபை பூரணப்பட வேண்டிய வித பற்றியும் ஆவியானவர் உவமான ரூபத்தில் தீர்க்க தரிசனமாக முன் குறித்த தீர்க்க தரிசன புத்தகம் " என்பது தான் வெளிப்பாடு .  இதை அனுசரித்தே இந்த புத்தகத்தின் மகத்துவங்களை நாம் தொடர்ந்து தியானிப்போம் ..

எல்லா துதியும் , கணமும் , மகிமையும் அவருக்கே .... ஆமென் ....

------  தொடரும்  ---------

-------------------------------------------------------------------------------------------------------------
மிகவும் கனத்திற்கு உரிய ஒரு தேவ ஊழியரின் புத்தகத்தின் பகுதிகளை மாத்திரம் நான் தொடர்ந்து இந்த பகுதியில்  பகிர்ந்து கொள்ளுகிறேன் .    

4 கருத்துகள்:

  1. அந்த கனத்திற்குரிய ஊழியர் யார் என்பதை தெரிவிக்க முடியுமா? அவரின் நூல்களை எந்த நிறுவனம் வெளியிடுகிறது. இயலுமாயின் அறியத் தாருங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    பதிலளிநீக்கு
  2. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . உண்மையில் இந்த புத்தகம் எந்த தகவல்களும் இல்லாத நிலையில் ( எழுதியவர் , வெளியிடப்பட்ட வருடம் , பதிப்பகம் ) அதனுடைய இரண்டு பக்க அட்டைகளும் கிழிந்த நிலையில் எனக்கு கிடைத்தது . அதை வாசித்து பார்த்த போது அது ஒரு பெரிய பொக்கிஷம் என்பதை கண்டு கொண்டேன் . அதனால் தான் நான் இதை பகிர தொடங்கினேன் .

    பிரிய சகோதரே , எப்பொழுது இந்த தகவல் கிடைத்தாலும் உங்களுக்கு அனுப்ப மறவேன் . நன்றி

    பதிலளிநீக்கு
  3. Happy to know you are writing on the Song of songs!
    Glad to know you are using a book already written.
    Please write your own views also.God will reveal to you if you wait upon the Lord.
    God bless you.
    Please refer also to the web on this subject.
    Work hard on this topic and with the grace of God you will be able to give us a good study.

    பதிலளிநீக்கு
  4. Waiting to read more on this! May our Dear Heavenly Father reveal to us the riches of His Kingdom.

    பதிலளிநீக்கு